பள்ளி இடைநிற்றல் தடுப்பு தொடர்பான குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 7 June 2023

பள்ளி இடைநிற்றல் தடுப்பு தொடர்பான குழு உறுப்பினர்களுக்கான கூட்டம்

பள்ளிசெல்லா குழந்தைகளை மீட்கவும் மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட ஆட்சியர் ஆணையின்படியும் முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுரையின் படியும் ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் வட்டார அளவிலான குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  வட்டார மேற்பார்வையாளர் வனிதா அனைவரையும் வரவேற்றார்.வட்டார ஒருங்கிணைப்பாளர் மலர்க்கொடி கூட்டத்தை ஒருங்கிணைத்தார். கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சின்ராசு,வட்டார கல்வி அலுவலர்கள் பவனந்தீஸ்வரன், சரஸ்வதி,மஹாலட்சுமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் ஆகியோர் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் தொடர்பான கருத்துக்களை வழங்கினர்.ஆசிரியர் பயிற்றுநர்கள் பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சுடலைமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரீமேன் சைல்ட் லைன்  உமா மஹேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad