தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு கருத்தரங்கு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 8 June 2023

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு கருத்தரங்கு.


உலக உணவு பாதுகாப்பு தினத்தை ஒட்டி அகில இந்திய வர்த்தக தொழிற் சங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது, கருத்தரங்கிற்கு தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரி அஜய் சீனிவாசன் தலைமையில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் மாரியப்பன் முன்னிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து வரவேற்று பேசினார். 


மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தி முருகன் அறிமுக உரை நிகழ்த்தினார், அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் டி ஆர் தமிழரசு எம்பவர் இந்தியா அமைப்பின் தலைவர் ஆ. சங்கர் தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அதிகாரி அபுல் காசிம் துறைமுக உணவு துறை அதிகாரி பாண்டியராஜன் ஆகியோர் வாழ்துரை வழங்கினார்கள்.


இக்கருத்தரங்கில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் மாரியப்பன் பேசுகையில் அரசின் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் முழு அளவில் பின்பற்ற வேண்டும் குறிப்பாக பனங்கருப்பட்டியில் சீனி கலப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஆராய்ச்சி செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பி இருப்பதாகவும் இது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம் எனவும் கூறினார். 


தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரி அஜெய் சீனிவாசன் பேசுகையில் தரமான உணவு மட்டுமே பொருட்களை மட்டுமே நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என்பதை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் உறுதி மொழியாக எடுத்து செயல்பட வேண்டும் என்று  கூறினார். 


அகில இந்திய தொழில் வர்த்தக சங்க முன்னாள் தலைவர் ஜோ பிரகாஷ் செயலாளர் சங்கர் மாரிமுத்து மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி பொருளாளர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் ஜோதிபாசு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad