1874இல், நாசரேத்தில் தொடங்கிய அஞ்சல் அலுவலகம், 1894இல் தபால் தந்தி சேவையைப் பெற்றது வருகிற 2024ஆம் ஆண்டில், நாசரேத் அஞ்சல் அலுவலகத்தின் வயது 150ஐ தொடும் தந்தி சேவையின் வயது 130ஐ தொடும். அதனை நினைவு கூர்ந்து கொண்டாடும் விதமாக அருள்திரு. மர்காஷியஸ் டேவிட் வெஸ்லி ஜெபித்து தொடங்கி வைத்தார்.


சேகர பொருளர் பா.எபனேசர் வரவேற்றார். இக்கூட்டத்தில், ஓய்வு பெற்ற அஞ்சல் துறை அலுவலர் சொர்ண மாணிக்கம், ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முன்னாள் தாளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ், சாயர்புரம் போப் கல்லூரி பேராசிரியர் குட்டி ஜேஸ்கர், நாசரேத் நகர கூட்டுறவு வங்கி கிளை முன்னாள் மேலாளர் அ.ஜோசப், அஞ்சல் துறை அலுவலர்கள் பொன்னையா, சிந்துஜா தேவி, பொறியாளர் இரஞ்சன் உட்பட பலர் விழா தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்நாள் மற்றும் முன்னாள் சேகர செயலர்கள், முன்னாள் பொருளர், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், சேகர முன்னாள் உறுப்பினர்கள், ஆலய உபதேசியார்கள் ஜெபராஜ், ஜாண்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர், திருமண்டல பெருமன்ற முன்னாள் உறுப்பினர் ரத்தினகுமார் நன்றி கூறினார், ஆலய உதவி குரு பொன்செல்வன் அசோக் குமார் ஆசீர்வாத ஜெபம் செய்ய கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments:
Post a Comment