தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம், தென்திருப்பேரையில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி 100 வது பிறந்த நாளை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. அதன்படி ஆழ்வார்திருநகரி யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் மற்றும் ஆழ்வார்திருநகரியிலிருந்து நாசரேத், சாத்தான்குளம் நெடுஞ்சாலை ஓரங்களில் நாவல், புங்கை, வேம்பு, புளி உள்பட சுமார் 2500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். திருச்செந்தூர் கோட்ட உதவி பொறியாளர் விஜய சுரேஷ் குமார், உதவி பொறியாளர் சிபின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment