தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா தென்திருப்பேரையில் செயல்பட்டு வந்த கால்நடை மருத்துவமனை பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் புதிய கட்டிடம் கட்ட ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டு இதற்கான அடிக்கல் நாட்டு விழா கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. விழாவில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.


பின்பு தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை, பண்ணைவிளை மற்றும் திருவைகுண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், தூத்துக்குடி மாவட்ட கால்நடை இணை இயக்குநர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) ஆண்டனி சுரேஷ், உதவி இயக்குனர் ஜோசப் ராஜ், கால்நடை மருத்துவர்கள் சுரேஷ், செந்தில் கண்ணன், பிரதீப், ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment