

எண்ணிக்கையில் சொல்லப்படும் மரணங்களும் காயங்களும் மனதை பதற வைக்க வைக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவிலேயே தயாரான ரயில் விபத்தை தடுக்கக்கூடிய கவாக் தொழில்நுட்பம் விபத்து நடந்த வழி தடத்தில் பயன்பாட்டில் இல்லாதது வேதனைக்குரியது. இதுவே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது, ஆடம்பர ரயிலுக்கு மட்டுமே கொடுக்கப்படும் முக்கியத்துவம், மற்ற சாதாரண ரயில்களுக்கு இந்த பாதுகாப்பு இல்லையா என்று நாடெங்கும் மக்களின் குரல் ஒலிக்கிறது.
தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா சமூக அமைப்பு மற்றும் மாவட்ட பயணிகள் சங்கம் சார்பில் இந்த விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள என்பவர் அமைப்பு மருந்தகம் வளாகத்தில் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட குறைதீர் ஆணைய உறுப்பினரும் எம்பவர் இந்தியா அமைப்பின் கௌரவச் செயலர் ஆ. சங்கர் தலைமை தாங்கினார், தூத்துக்குடி மாவட்ட பயணிகள் சங்க தலைவர் கல்யாணசுந்தரம் செயலர் பிரமநாயகம் பொறுப்பாளர்கள் லட்சுமணன் ஆனந்தன் அந்தோணி முத்துராஜா சமூக ஆர்வலர் கணேசன் எம்பவர் இந்தியா மேலாளர் லலிதாம்பிகை பணியாளர் தீபக் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

No comments:
Post a Comment