தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி பேரூராட்சியின் செயல் அலுவலர் இராஜேஸ்வரி பணி இடமாறுதல் பெற்று செல்கின்றார். மேற்படி செயல் அலுவலர் தனது பணிக்காலத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் உடன் சேர்ந்து திறம்பட பேரூராட்சி நிர்வாகத்தை நடத்தி வந்ததின் அடிப்படையில் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன்இசக்கி ஏற்பாட்டின் பேரில் நேற்று முன்தினம் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத்தலைவர், துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் அவர்களுக்கு திருமறைக் குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.



No comments:
Post a Comment