தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 6 மணிக்கு ஹோமம் மற்றும் பூஜை உடன் தொடங்கப்பட்டது.


காலை 7:00 மணிக்கு விமான அபிஷேகமும் அதனை தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெற்றது. பின்பு காலை 8 மணிக்கு மேல் ஸ்ரீ முத்தாரம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தல் நிகழ்ச்சி மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் மகாதீபாரதனையும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குமாரபுரம் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


No comments:
Post a Comment