நாசரேத் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாற்றத்தைதேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 4 June 2023

நாசரேத் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாற்றத்தைதேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ் பாலாஜி சரவணன் அறிவுறுத்தல் படி நாசரேத் காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து மாற்றத்தை தேடி எனும் விழிப்புணர்வு மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச்சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், காவலன்  SOS செயலி குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091,181 ஆகிய செல் போன் எண்கள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 


மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக காவல்துறையினரின் முன்னிலையில் நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி ஏற்று கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad