தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், நாசரேத் அருகில் உள்ள கீழ வெள்ளமடம் பெட்ரோல் பங்க் விலக்கில் வயல் வரப்பில் இருந்த மின்கம்பம் சாய்ந்து உள்ளது, இதனால் அப்பகுதிக்கு செல்லும் மின்சாரம் தடைபட்டுள்ளது மேலும் வயல்வெளிகளில் வேலைக்கு செல்வோர் தடுமாற்றம் அடைந்துள்ளனர், இது போன்ற சம்பவம் இப்பகுதியில் அடிக்கடி நிகழ்வதால் பெரும் பாதிப்பை ஏற்படுவதற்கு முன்பாக மின் பாதையை சீரமைப்பு செய்வதுடன் மின் கம்பங்களை சாய்ந்து விழாமல் இருக்க தகுந்த ஏற்பாடுகளை செய்து தர அப்பகுதி மக்கள் தெரிவித்தனர், எனவே மின்வாரிய ஊழியர்கள் மீண்டும் இது போல நடக்காமல் தடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


.jpg)
No comments:
Post a Comment