அரசாணையை அவமதிக்கும் அரசு பேருந்து; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 June 2023

அரசாணையை அவமதிக்கும் அரசு பேருந்து; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.


சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் NH44 - நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் கங்கைகொண்டானுக்கும் கயத்தார் - க்கும் இடையில் அமைந்துள்ளது இராஜாப்புதுக்குடி எனும் சிற்றூர், இந்த ஊரில் இருந்து 24 கி.மீ தொலைவில் இருக்கக்கூடிய திருநெல்வேலி, பாளையங்கோட்டை நகரங்களில் தான் மேல் படிப்புக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்று வர வேண்டி உள்ளது. 

திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி செல்லும் அனைத்து புறநகர் சாதாரண மற்றும் எஸ் எப் எஸ் பேருந்துகள் நின்று செல்ல அரசாணை வழங்கி உள்ளது, ஆனால் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இந்த நிறுத்தங்களில் நின்று செல்கின்றது, மேலும் இந்த வழித்தடத்தில் ஒரு தனியார் பேருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக கூட்டத்துடன் மாணவர்கள் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியபடி  பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது, பலமுறை இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அந்த அரசு ஆணையை மீறி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்கின்றன. 


இதனால் தினசரி பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், தற்போது பள்ளி கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின் துவங்க இருப்பதால், இதனை அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்து அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை அறிவுறுத்துமாறு பொதுமக்கள் எதிர்பார்க்கின்றார்கள். 


நேற்று 04.06.2023 காலை 10.30 மணி அளவில்  நிறுத்தாமல் சென்ற பேருந்தை வழி மறித்த போது அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது, உடனே அங்கு சென்ற கங்கைகொண்டான் காவல் துறையினரின் 30 நிமிட சமரச பேச்சுவார்த்தைக்கு பின் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தால் பயணிகளை ஒன்று திரட்டி விரைவில் மேற்படி நான்கு வழி சாலையில் போராட்டம் நடத்தப்படும் என அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad