இம்முகாமிற்கு ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெ.தினேஷ் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மேரி அவர்கள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கருப்பசாமி அவர்கள் பங்கேற்றார். பண்டாரவிளை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மற்றும் RBSK மருத்துவ அலுவலர் ஏரல் சித்தா மருத்துவ அலுவலர், ஏரல் பல் மருத்துவர், கண் மருத்துவ உதவியாளர், ICDC ஆலோசகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், மருத்துவமல்லா மேற்பார்வையாளர், வட்டார அளவிலான அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வக நுட்புனர், பண்டாரவிளை கிராம சுகாதார செவிலியர்கள், MLHP, சித்தா மருத்துவ குழுவினர் RBSK மருத்துவ குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


இம்முகாமில் பள்ளி மாணவர்களின் உடல் எடை, உயரம், இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு சித்த மருத்துவ அலுவலரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளும் லேகியங்களும் வழங்கப்பட்டன. ICDC ஆலோசகர் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் கண் பரிசோதனை, பல் ஈறு பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவரின் பரிந்துரையின் படி மாணவிகளுக்கு இரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு இரத்தத்தின் அளவு (HB) பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையின் பேரில் குறைபாடு கண்டறியப்பட்ட மாணவ மாணவிகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மேற் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இம்முகாமில் அனைத்து ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு நல்கினர். அனைத்து மாணவர்களும் மிகவும் உற்சாகத்துடன் இம்முகாமில் கலந்துகொண்டனர். மாலை முகாம் இனிதே நிறைவடைந்தது.

No comments:
Post a Comment