தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செட்டியார் கிழக்குத் தெருவை சேர்ந்த துரைமுருகன் மகன் ஜெயசூர்யாவுக்கு (25)வடக்கு ரதவீதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடைய சகோதரியுடன் திருமணம் நடந்திருந்தது.
தம்பதிகள் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் வெங்கடேஷ் நேற்று இரவு 8 மணி அளவில் துரைமுருகனின் வீடு புகுந்து தனது சகோதரி கணவர் ஜெயசூர்யாவை சரமாரியாக வெட்டினார்.
படுகாயம் அடைந்வரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment