கூட்டாம்புளி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டோர் மீட்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 16 June 2023

கூட்டாம்புளி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டோர் மீட்பு.


தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள கூட்டாம்புளி என்னும் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு  சில மாதங்களாக சாலையோரத்தில் மிகுந்த கோடை வெயில் தாக்கத்தினால் தவித்து வந்த நபரை (15. 06.23) மீட்டு தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி  அலுவலர் சிவசங்கரன் அவர்களின் உதவியோடு நாசரேத் நல்ல சமாரியின்  மனநல காப்பகத்திற்க்கு  அழைத்து வந்து அவருடைய முடிகளை வெட்டி, அழுக்கடைந்து மிகுந்த துர்நாற்றம் வீசக் கூடிய கந்தலான ஆடைகளை அகற்றி  குளிக்க வைத்த பின் புதிய ஆடைகளை அணிவித்தனர்.


இந்த சமூகப் பணியினை  மிகவும் பொருளதார நெருக்கடியில் செய்து வருகின்ற நல்ல சமாரியன் மனநலம் பாதிக்கப்பட்டோர்  பாதுகாப்பு இல்லத்திற்க்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்ய முன் வாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் தொடர்புக்கு F. கிளாட்வின் ஜோசப் 83005 18371, 97913 79051, 94987 54394 என்ற எண்களை அழைக்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad