Fevicryl, YMCA Nazareth, Aero Art & Craft இணைந்து நடத்திய மாணவ மாணவியர்களுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் கடந்த 10 நாட்களாக YMCA வளாகத்தில் நடைபெற்றது, முகாம் நிறைவு விழா மற்றும் கண்காட்சி 21/05/2023 அன்று மாலை 5.00 மணிக்கு இயேசுவின் நித்திய அன்பு ஜெப வீட்டில் வைத்து நடைபெற்றது.


விழாவிற்கு நாசரேத் YMCA தலைவர் எபனேசர் தலைமை தாங்கினார், நாசரேத் YMCA செயலாளர் N.சாமுவேல் ராஜ் முன்னிலை வகித்தார், நாசரேத் YMCA செயற்குழு உறுப்பினர்கள் லேவி அசோக் சுந்தர், லயன் புஷ்பராஜ் கலந்து கொண்டு பயிற்சியை குறித்து வாழ்த்தி பேசினார்கள். ரோஸ்லின் மோசஸ் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி விவரித்து பேசினார்.
விழாவின் நிறைவாக பயிற்சியில் கலந்து கொண்ட 44 மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் பயிற்சியின் சிறப்புகளை பற்றிய தங்களுடைய கருத்துக்களை கூறினார்கள். முடிவில் செயலாளர் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment