புன்னக்காயலில் மாநில கால்பந்து போட்டியில் நேற்று 19.05.2023 வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்று தமிழ்நாடு போலீஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 20 May 2023

புன்னக்காயலில் மாநில கால்பந்து போட்டியில் நேற்று 19.05.2023 வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்று தமிழ்நாடு போலீஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.


தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் நடந்து வரும் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் தஞ்சை அணியை வீழ்த்தி தமிழ்நாடு போலீஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆத்தூரை அடுத்துள்ள புன்னக்காயலில் புனித வளனார் கால்பந்து கழகத்தின் சார்பில் மாநில கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மாநிலத்தில் உள்ள 14 மாவட்ட அணிகளும் தமிழ்நாடு போலீஸ் அணியும் கலந்து கொன்டது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணியும், தஞ்சை மாவட்ட கல்பந்தாட்ட கழக அணியும் விளையாடின. ஆட்டம் தொடங்கியது முதல் போலீஸ் அணியின் கை ஓங்கி இருந்தது. தஞ்சாவூர் அணியினர் பெரும்பாலும் தடுப்பு ஆட்டத்திலேயே கவனம் செலுத்தினர். ஆனாலும் போலீஸ் அணியினர் அடுத்தடுத்து கோல்களை அடித்தனர். இறுதியில் தமிழ்நாடு போலீஸ் அணி 6-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.




இன்று (சனிக்கிழமை) இரண்டாவது அறை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் நெல்லை அணியும், திருச்சி மாவட்ட கால்பந்தாட்ட கழக அணியும் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியும் தமிழ்நாடு போலீஸ் அணியும் இறுதிப் போட்டியில் நாளை(ஞாயிற்றுக் கிழமை) மோதுகின்றன.


நேற்றைய போட்டியின் சிறப்பு விருந்தினராக சாகுபுரம் டி. சி. டபிள்யூ தொழிற்சாலையின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி. ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டார். அவருக்கு இரு அணி வீரர்களை விளையாட்டு கழகத்தின் தலைவர் யூஜீன் ரொட்ரிகோ, செயலாளர் ஜோசப், ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ் பெர்ணான்டோ, சந்திர போஸ் பர்ணான்டோ, பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் சகாயராஜ் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர் 

No comments:

Post a Comment

Post Top Ad