டி. டி. டி ஏ.புதுக்கோட்டை பி. எஸ். பி மேல்நிலைப் பள்ளியில் 1999 to 2006 ஆம் ஆண்டு படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. விழாவில் 17 ஆண்டுக்கு முன் பள்ளியில் படித்த நினைவுகளை மாணவ மாணவியர்கள் பகிர்ந்து கொண்டனர். இதில் தலைமை ஆசிரியர் தேவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பள்ளி தாளாளர் நீகர்பிரின்ஸ் கிப்ஸ்சன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ஜெயபிரகாஷ், தங்கராஜ்,பொன்னுதுரை, ஆசிர்ராஜாசிங்,ஆசிரியைகள் பிரேமா,டேசி.லூர்துசாமி,ஜான்விக்டர்,மல்லிகா,ரோஸ்லின்,சுமதிபிலிப்,அன்னாள்.செல்வராஜ்.செல்லதாய்,பியூலா,பூரணி,எழிலரசி,பிரதிபா,நிர்மலா ஆல்வின்,ஜெனிபாமற்றும் பழைய மாணவ,மாணவிகள், குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தாங்கள் படித்த புதுக்கோட்டை பி. எஸ். பி பள்ளியின் புதிய நுழைவாயில் கட்டுவதற்காக 50000 நன்கொடையையும் வழங்கினர்.
No comments:
Post a Comment