உலகப் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சத்ரு சம்ஹார யாகம் செய்தார், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வந்திருந்தார். கோவில் விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவிலுக்கு சென்று மூலவரை தரிசனம் செய்தார்.


பின்னர் 6 மணிக்கு சூரசம்ஹாரமூர்த்தி சன்னதியின் எதிர்புறம் சத்ரு சம்ஹார பூஜை செய்தார். அதைத் தொடர்ந்து வெளிப்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார். பின்னர் சத்ரு சம்ஹார மூர்த்தி சன்னிதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடைபெற்றது. பின்பு கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

No comments:
Post a Comment