ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 27 May 2023

ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு.

 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று (27.05.2023) ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான நரசன்விளை சந்திப்பு, ஆவரையூர், தலைவன்வடலி வடக்கு தெரு மற்றும் தலைவன்வடலி சந்திப்பு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரோந்து சென்று திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணிகளை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.


இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ரகு உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad