தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் தீயணைப்புத்துறை வீரர் ஆகிய பதவிகளுக்கு தேர்வு நடைபெற்றது.இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலராக தேர்வாகியுள்ள 63 ஆண்கள் மற்றும் 27 பெண்கள் என மொத்தம் 90 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் 26.05.2023 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்கி சிறப்பாக பணியாற்ற அறிவுரைகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேற்படி காவலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சேலம், திருச்சி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வரும் 01.06.2023 அன்று முதல் பயிற்சி தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி குமார், அலுவலக கண்காணிப்பாளர்கள் சுப்பிரமணியன் மற்றும் அமைச்சுப் பணி உதவியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment