கிராமப்புற உயர் கல்வி வளர்ச்சிக்கு உதவும் டி. எம். எம். கல்லூரிக்கு கிரிஷ் இன்போடெக் நிறுவன விருது - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 27 May 2023

கிராமப்புற உயர் கல்வி வளர்ச்சிக்கு உதவும் டி. எம். எம். கல்லூரிக்கு கிரிஷ் இன்போடெக் நிறுவன விருது

சென்னை வடபழனியில் உள்ள
கிரிஷ் இன்போடெக் நிறுவனம் சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருது பெற சென்ற மாதம் அழைப்பு விடுத்தது .மொத்தம் 34 கல்வி நிறுவனங்கள் சிறந்த விருதுக்கான விண்ணப்பம் செய்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் டி.எம்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருது  வழங்கப்பட்டது . க்ரிஷ் இன்போடெக் நிறுவனத்தின் அதிகாரி  சந்தானகிருஷ்ணன் கல்லூரிக்கு நேரில் வருகை தந்து சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருது மற்றும் சான்றிதழ்களை இயக்குனர் முனைவர் கோபால் முன்னிலையில் கல்லூரியின் தலைவர் மற்றும் பத்திரகாளி அம்மன் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான தாமசிடம் வழங்கினார். கிராமப்புற மாணவர்களுக்கான சேவை, குறைந்த கல்வி கட்டணம் போன்ற காரணிகள் அடிப்படையில் இவ் விருது வழங்கப்பட்டது. விழாவிற்கு வருகை தந்த குளத்தூர்  சதீஷ்குமார்  ஞானசேகரன்   சந்திரசேகரன் ,  ஜெய குருசாமி மற்றும் பேராசிரியர் பெருமக்களை வரவேற்று இயக்குனர் முனைவர் கோபால் உரை நிகழ்த்தினார். கல்லூரியின் தலைவர் தாமஸ்  தமது சிறப்புரையின்போது விருதுகள் எங்களை மென்மேலும் சமூகப் பணி ஆற்ற உதவி செய்யும் என்று கூறினார். டி. எம். எம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அதிகப்படியான வேலை வாய்ப்புகள் மற்றும் மென் திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை இலவசமாக கிடைக்கும் படியான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்லூரி மற்றும் கிரிஷ் இன்போடெக் நிறுவனம் இடையே  கையெழுத்தானது . இந்த ஒப்பந்தத்தின் மூலம்  கல்லூரியின் முதல்வர் முனைவர் அன்பழகன் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad