இதில் நிறைவாக 185பேர் முழுபயிற்சியும் முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இலவச கபாடி பயிற்சி முகாம் நிறைவு விழா நாலுமாவடி ஏலீம் கார்டன் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட அமச்சூர் கபடி கழகத் தலைவரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர். இராதா கிருஷ்ணன் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனமும், புது வாழ்வு சங்கமும் இணைந்து ஆண்களுக்கான கோடைகால இலவச கபாடி பயிற்சி முகாமை ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டின் நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் நான் பெருமையடைகிறேன் ஆறாவது வருடமாக தொடர்ந்து பயிற்சி முகாமை நடத்தி இதன் மூலம் பல்வேறு வகையில் பெருமை சேர்த்து, பயன்பெற்ற மாணவர்களையும் இங்கு வரவழைத்து பயிற்சி அளித்தது, பெருமைக்குரிய விஷயமாக கருதுகிறேன். இதனை செய்து வரும் சகோ. மோகன் சி.லாசரஸ் அவர்களை மனதார பாராட்டுகிறன்.


மேலும் இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றாலும், இங்கு பயிற்சி பெற்றதின் சிறப்பை நீங்கள் எடுத்துரைக்க வேண்டும். அதுதான் இந்த பயிற்சி முகாமில் நீங்கள் பங்கு பெற்றதற்கான பெருமையாகும் தொடர்ந்து 12 நாட்களாக இந்த பயிற்சி முகாமில் மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் அளித்த அர்ஜுனா விருது பெற்ற கபாடி வீரர் மணத்தி கணேசன் அவர்களையும் மனதார பாராட்டுகிறேன். இப்பணி மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட அமச்சூர் கபாடி கழக செயலாளர் கிரிஸ்டோபர் ராஜன், அர்ஜுனா விருதுபெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திமுக வர்த்தக அணி இணைச் செயலர் உமரிசங்கர், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஜனகர், தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இராமஜெயம், ஆழ்வார்திரு நகரி ஒன்றிய திமுக செயலாளர்கள் நவீன்குமார், சதீஷ்கு மார் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட்செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக விழாவில் இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் மாணத்தி எட்வின் வரவேற்றார். விழாவில் பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் சென்னை சாய் ஜெயராஜ், ஜானகிராமன், அசோக், சாம்சன், தங்கவேல், மணி, சிவா ஆகியோருக்கு அமைச்சர் நினைவுபரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசுவிடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருது பெற்ற கபாடி வீரர் மணத்தி கணேசன், இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார், விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் மாணத்தி எட்வின், பிசியோதெரபிஸ்ட் பாக்யராஜ், ஜேம்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment