தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் உதவி ஆய்வாளர் பாரத்லிங்கம் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தட்டி ஐயன், தலைமை காவலர் பூலையா நாகராஜன் உள்ளிட்டோர் ரேசன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக திருச்செந்தூர் - குலசேகரன்பட்டினம் பிரதான சாலையில் ஆலந்தலை சந்திப்பு பேருந்து நிறுத்தம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக வந்த டிஎன் 69 பிஆர் 6062 என்ற பதிவெண்கொண்ட சுமை தூக்கும் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.


அதில் சுமார் 40 கிலோ எடை கொண்ட 17 மூடைகளில் தமிழக அரசு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கும் சுமார் 680 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் சாத்தான்குளம், கருங்கடல் செம்மண் குடியிருப்பைச் சேர்ந்த மரியசிலுவை என்பவரது மகன் பாலாசிங் (32) மற்றும் ஓட்டுநரான தூத்துக்குடி, கதிர்வேல் நகரைச் சேர்ந்த வேதமுத்து மகன் டவீன் செல்வராஜ் (40) ஆகியோர் குலசேகரன்பட்டினம், ஆலந்தலையை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி, அதனை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தியது தெரியவந்தது.
இதைடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடமிருந்து ரேசன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment