தென்னிந்திய திருச்சபை, தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் 48-வது செயற்குழு கூட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 31 March 2023

தென்னிந்திய திருச்சபை, தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் 48-வது செயற்குழு கூட்டம்.


தென்னிந்திய திருச்சபை, தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் 48-வது செயற்குழு கூட்டம் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.கல்லூரியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரி சிற்றாலயத்தில் காலை 10 மணி அளவில் செயற்குழு உறுப்பினர்களுக்கான திருவிருந்து ஆராதனையை திருமண்டல குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்றக் மற்றும் உப தலைவர் தமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பிரதமப்பேராயரின் ஆணையர் தீமோத்தேயு ரவீந்தர் செய்தி அளித்து திருவிருந்து பகிர்ந்தளித்தார். அதனைத் தொடர்ந்து காலை உணவு வழங்கப்பட்டது. 

காலை 11 அளவில் திருமண்டல செயற்குழு கூட்டம் பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து பிரதமப்பேராயரின் ஆணையர் தலைமையில் நடைபெற்றது. திருமண்டல செயற்குழு உறுப்பினர்களில் 26 பேர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு அனுமதி வழங்குவது, திருச்சபைகளின் வளர்ச்சிக்காக புதிய சேகரங்களை உருவாக்குவது, புதிய குருவானவர்கள் தேர்வு செய்வது போன்றவற்றிக்கும் ஒப்புதல் பெறப்பட்டது.


மேலும், ஏற்கனவே பணிநியமனம் செய்யப்பட்டு ஊதியம் கிடைக்காமல் உள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது, புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் திருமண்டல நிலைவரக்குழு கூட்டங்களின் நடபடிகள் விவாதித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருமண்டல லே காரியதரி நீகர் பிரின்ஸ் கிப்சன் செய்திருந்தார். குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்றக் நன்றி கூறினார். ஜாண் தாமஸ் சபை மன்ற தலைவர் நவராஜ் இறுதி ஜெபம் ஏறெடுத்தார்.


பிரதமப் பேராயரின் ஆணையர் தீமோத்தேயு ரவீந்தர் ஆசீர்வாதம் கூற கூட்டம் நிறைவு பெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக போலீசாருடன் அங்கு வந்த ஏரல் தாசில்தார், கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்று கூறி தடுத்தார். எதை வைத்து சொல்கிறீர்கள் என்றும், அப்படியெதுவும் வராது. சட்டப்படிதான் எல்லாமே நடந்து வருகிறது என்றும் திருமண்டல நிர்வாகிகள் அவரிடம் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு கூட்டம் செயற்குழு கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது. 

No comments:

Post a Comment

Post Top Ad