செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் இணைய வழி வணிக நிறுவனமான டி சி கே ஏ பி (DCKAP) சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 31 March 2023

செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் இணைய வழி வணிக நிறுவனமான டி சி கே ஏ பி (DCKAP) சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் இணைய வழி வணிக நிறுவனமான டி சி கே ஏ பி (DCKAP) சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பிற்கு முன்னோட்டமாக நடைபெற்றது. இந்நிறுவனத்தில் பயிற்சி பெறும் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வீதம் தினமும் இருவேளை உணவுடன் எவ்வித கட்டணமின்றி இலவச பயிற்சியை ரூபாய் 10,000 ஊக்க தொகையுடன் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.


பயிற்சிக்கு தேவையான கணினி மற்றும் இணையவழி இணைப்பு அனைத்தும் மாணவர்களுக்கு கொடுக்கப்படும். 18 மாதங்கள் பயிற்சிக்கு பிறகு அதில் நன்கு தேர்ச்சி அடைந்த மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் வேலையை தொடரலாம். இந்த பயிற்சியை விரும்பும் மாணவர்களுக்கு இதற்கான நேர்காணல் வருகின்ற வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் அவர்கள் வழிகாட்டுதலின்படி முதல்வர் டாக்டர் ஆவுடையப்பன் ஆலோசனைப்படி துணை முதல்வர் ஜாய்ஸ் மேரி முன்னிலையில்  கல்லூரி வேலைவாய்ப்பு துறை அலுவலர் ஆறுமுக சேகர், மின்னியல் துறை தலைவர் ஜான் செண்பக துறை மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

முதலாம் ஆண்டு துறைத் தலைவர் வெங்கடேஷ் பொன்னாடை அணிவித்து வரவேற்று பேசினார், ஆசிரியர் பரிமளம் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad