திருச்செந்தூர் கோவிலில் நாளை தைப்பூசம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிகின்றனர்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 4 February 2023

திருச்செந்தூர் கோவிலில் நாளை தைப்பூசம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிகின்றனர்!


தைப்பூசதிருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தைப்பூசம் நடக்கிறது. விழாவில் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்ய வந்துகொண்டிருக்கின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெறுகிறது. 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜையும் நடைபெற்று கோவில் நடை திருக்காப்பிடப்படும்.  திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக், திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தைப்பூசதிருவிழாவில் பங்கேற்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் மாலை அணிந்து, விரதமிருந்து பக்தி பாடல்கள் பாடியும், வேல் குத்தி, காவடி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்த குவிந்த வண்ணம் உள்ளனா். குழந்தைகள் முருகன் வேடமிட்டும், முருகன் உருவம் பொறித்த படங்கள், சிலைகளுடன் அலங்கரிக்கப்பட்ட வாகன ரதத்தில் விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பக்தா்கள் அதிகளவில் வந்துள்ளனா்.

No comments:

Post a Comment

Post Top Ad