தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் டி.எம்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான கலை நிகழ்ச்சி போட்டிகள் 2023 நடைபெற்றது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த 13 கல்லூரிகளில் இருந்து மொத்தம் 260 மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டார்கள். கல்லூரியின் முதல்வர் முனைவர் மா. அன்பழகன் போட்டிகளில் கலந்து கொள்ள வருகை தந்த அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளையும் பேராசிரியர்களையும் வரவேற்றார். கல்லூரியின் இயக்குனர் முனைவர் கோபால் போட்டிகளை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து உரையாற்றுகையில் " மாணவர்கள் இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் தங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடியும். போட்டி நிறைந்த இந்த உலகத்தில் தனிமனித அடையாளத்தை நிலை நிறுத்த உதவும் "என்று கூறினார். குழு நடனம்,மௌன நாடகம், ஒட்டி,வெட்டி பேசுதல்,விளம்பர யுக்தி,குறும்படம் தயார் செய்தல் ஆகிய 5 போட்டிகள் நடைபெற்றன. அனைத்து மாணவ மாணவர்களும் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களுடைய தனித்திறனை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு போட்டியும் 2 பேராசிரியர்களை கொண்ட நடுவர் குழுவால் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு முதல் 3 இடங்களை பெற்ற அணிகள் தேர்வு செய்யப்பட்டன. வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு ஒட்டுமொத்தமாக அதிக மதிப்பெண்களைப் பெற்று தூத்துக்குடி ஏ. பி.சி மகளிர் கல்லூரி முதல் இடத்தையும்
சென்மேரிஸ் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்றன.ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை கைப்பற்றிய மாணவ மாணவிகளுக்கு டி. எம். எம் கல்லூரியின் இயக்குனர் முனைவர் கோபால் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார். ஒட்டு மொத்த மதிப்பெண் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பெற்ற கல்லூரிகளுக்கு வணிகவியல் துறை சார்பில் நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி செல்வி மேன்சி நன்றி உரை வழங்க விழா நாட்டுப்பண்ணோடு இனிதே நிறைவுற்றது. போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் வணிகவியல் துறை தலைவி செல்வி சுதா அனைத்து பேராசிரியர்கள் உதவியோடு திறம்பட செய்திருந்தார்கள்.
No comments:
Post a Comment