தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா தட்டார் மடம் காவல் நிலையம் சார்பில் மாற்றத்தை தேடி எனும் நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் P.K பவுலோஸ் தலைமையில் உதவி ஆய்வாளர் குருசுமிக்கேல், சாஸ்தாவின் நல்லூர் விவசாய நலச் சங்க செயலாளர் A.லூர்து மணி முன்னிலையில் டிராக்டர் உரிமையாளர்கள்,ஓட்டுநர் ஆகியோர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிராக்டர்களில் சுற்று பகுதியிலும் பின்பகுதியிலும் மற்ற வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சம் பட்டு ஒளியை பிரதிபலிக்கும் ஸ்டிக்கரை கண்டிப்பாக ஒட்ட வேண்டும் என்ற அறிவுறுத்தல் நிகழ்ச்சியில்
காவல் ஆய்வாளர்
P.K பவுலோஸ் பேசும்போது "சமீப நாட்களாக டிராக்டர்களில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தவிர்க்க டிராக்டரில் ரிப்ளக்டர் ஸ்டிக்கர் கண்டிப்பாக ஒட்ட வேண்டும் என்றும்,
பதிவு சான்றிதழ் (RC BOOK) அல்லது ஸ்மார்ட் கார்டு (RC Card) கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி இருவகைப்படும் காம்பிரிஹென்சிவ் பாலிசி என்பது பல்வேறு பாதுகாப்புகளை உள்ளடக்கியது என்றும்,இரண்டாவது பாலிசி மூன்றாவது நபர் பாலிசி என்பதாகும். ஒவ்வொரு வாகன உரிமையாளரும் கட்டாயம் எடுத்தே தீர வேண்டிய பாலிசியாகும் என்றும் காப்பீடு மூன்றாவது நபருக்கு பாதிப்பு அல்லது ஆபத்து நேரும்பொழுது(மோட்டார் வாகன சட்டப்படி) நிவாரணம் அளிப்பதற்காக ஏற்பட்டது இந்த பாலிசி என்றும் கூறினார். மேலும் வாகனங்களை செலுத்த அதிகாரம் அளிக்கும்(Driving licence) ஆவணத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் மது அருந்திவிட்டு எக்காரணத்தைக் கொண்டும் வண்டி ஓட்டக்கூடாது என்றும் மேலும் பல விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கியதுடன் மூன்று டிராக்டர்களில் ரிப்ளக்டர் ஸ்டிக்கர் ஒட்டியதுடன் மற்ற டிரைவர்களுக்கு அவரவர் வண்டியில் ஒட்டவும் வலியுறுத்தி ஸ்டிக்கர் கொடுத்தார் . இதில் மொத்தம் 25 பேர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment