தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்தாலுகாவிலுள்ள வ.உ.சி. விளையாட்டுக்கழகத்தின் 35ம் ஆண்டு விழா மற்றும் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான மினி மாரத்தான் போட்டி ஒட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.போட்டியை யூனியன் சேர்மன் ரமேஷ் துவக்கி வைத்தார்.மாணவர்களுக்கு 10 கி.மீ தொலைவும் மாணவிகளுக்கு 5 கி.மீ தொலைவும் , 6ம் வகுப்புக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 2 கி.மீ தொலைவும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. போட்டிக்கு வ.உ.சி விளையாட்டுக் கழக தலைவர் சாமுவேல் தலைமை வகித்தார். துணை தலைவர் யோகராஜ், ஒருங்கிணைப்பாளர் பெரியமோகன், ஆலோசகர் தமிழாசிரியர் முருகேசன், வ. உ. சி. அரசு மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியை மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டுக் கழக நிறுவனர் லெனின் வரவேற்றார்.
நடைபெற்ற போட்டிகளில் முதல் 3 பரிசுகளையும் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மனோஜ்குமார், முகேஷ், முத்துமுனியாண்டி ஆகியோர் தட்டிச் சென்றனர். அவர்களுக்கு வெள்ளி பரிசுப் பொருட்களை சிலோன்காலனி கே.பி.கே கான்ட்ராக்டர்ஸ், முப்புலிவெட்டி பால் கூட்டுறவு சங்கத் தலைவர் முத்துவேல், ராஜாவின்கோவில் பஞ்., தலைவர் அன்புராஜ் ஆகியோர் வழங்கினர். மாணவிகள் போட்டியில் முதல் பரிசை புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலாவும் , 2வது பரிசை புதுார் இந்து நாடார் பள்ளி மாணவி சங்கீதாவும் , 3வது இடத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவி கனகலட்சுமியும் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஓட்டப்பிடாரம் வ.உ.சி விளையாட்டுக் கழக ஒருங்கிணைப்பாளர் மாடசாமி(எ) பெரிய மோகன், ஓட்டப்பிடாரம் மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவனத் தலைவர் எல்.கே.முருகன், தமிழ்நாடு ஊராட்சி உதவியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் பழனிச்சாமி ஆகியோர் வெள்ளி பரிசுப் பொருட்களை வழங்கினர்.
No comments:
Post a Comment