விளையாட்டின் மூலம் தான் மாணவர்கள் தன்னம்பிக்கையை பெற முடியும்- இந்திய ஹாக்கி அணி வீரர் கார்த்திக் செல்வன் பேச்சு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 13 January 2023

விளையாட்டின் மூலம் தான் மாணவர்கள் தன்னம்பிக்கையை பெற முடியும்- இந்திய ஹாக்கி அணி வீரர் கார்த்திக் செல்வன் பேச்சு

உலகக் கோப்பை ஹாக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஸ்ரீவைகுண்டம் குமர குருபர சுவாமிகள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணியில் விளையாடி வெற்றி பெற்ற ஹாக்கி வீரர் கார்த்திக் செல்வன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்பு அவர் பேசுகையில் "அனைத்து மாணவர்களும் ஹாக்கியோ வேறு ஏதேனும் ஒரு விளையாட்டையோ விளையாட வேண்டும். விளையாட்டின் மூலம் தான் மாணவர்கள் தன்னம்பிக்கையை பெற முடியும்.மேலும் பல நன்மைகள் உள்ளது.கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்பட விளையாட்டு பெரும் உதவியாக இருக்கும்" என்று மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார்.அதோடு நமது அணி தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று வெண்கலப்பதக்கம் வென்ற உத்வேகத்தில் உள்ளது.இப்போது உலக கோப்பையிலும் விளையாட உள்ளது.இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றார்.அத்துடன் பள்ளி ஹாக்கி அணி வீரர்களுக்கு ஹாக்கி விளையாட்டைப் பற்றிய நுணுக்கங்களை கற்று தந்ததுடன் அவரும் மாணவர்களோடு விளையாடினார்.இந்த விழாவில் குமர குருபர சாமி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரும் தற்போது தமிழக அணியில் விளையாடி வரும் வீரர் நந்தகுமார் கலந்து கொண்டார்.விழாவில் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை சந்தன மாலை மற்றும் பரிசுகளை பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன் வரலாற்று ஆசிரியர் முத்தையா, கணித ஆசிரியர் சங்கரநாராயணன், ஆகியோர்  வழங்கினர்.தேசிய மாணவர் படை ஆசிரியர் மாணிக்கம் அணிவகுப்பு மரியாதை செய்தார். விழா ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முருகன் செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad