திருச்செந்தூர் கோவிலில் நாணயங்களை பிரிக்கும் எந்திரம்: பக்தர் உபயமாக வழங்கினார்!. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 12 January 2023

திருச்செந்தூர் கோவிலில் நாணயங்களை பிரிக்கும் எந்திரம்: பக்தர் உபயமாக வழங்கினார்!.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நாணயங்களை பிரிக்கும் இயந்திரத்தினை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் இயக்கிவைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பக்தர்கள் அளிக்கும் காணிக்கை உண்டியல்கள் மூலம் கிடைக்கும் பணத்தை எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதம் (ஜனவரி)  உண்டியல் பணம் எண்ணும் பணி கோயில் கோபுரவாசல் அருகில் உள்ள காவடி மண்டபத்தில் துவங்கியது.


இப்பணியினை  திருச்செந்தூர் திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் பார்வையிட்டார். அப்போது திருப்பூரை சேர்ந்த சஷ்டிகா என்ற பக்தர் உபயமாக வழங்கியுள்ள, 10, 5, 2 மற்றும் ஒரு ரூபாய் நாணயங்களை தனித்தனியே பிரிப்பதற்கான இயந்திரத்தை இயக்கிவைத்தார். நிகழ்ச்சியில் இணை ஆணையர் கார்த்திக், தூத்துக்குடி மண்டல உதவி ஆணையர் சங்கர், அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad