எஸ்ட்டென்ஷன் நடுநிலைப் பள்ளியில் ஜே.சி.ஐயின் தேசிய இளைஞர் தின கொண்டாட்டம். சிறு சேமிப்பு பயிற்சி வகுப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 6 January 2023

எஸ்ட்டென்ஷன் நடுநிலைப் பள்ளியில் ஜே.சி.ஐயின் தேசிய இளைஞர் தின கொண்டாட்டம். சிறு சேமிப்பு பயிற்சி வகுப்பு.

 
தூத்துக்குடி புதுகிராமத்தில் உள்ள எஸ்ட்டென்ஷன் நடுநிலைப் பள்ளியில் ஜே.சி.ஐ பியர்ல் சிட்டி குயின் பீசின் தேசிய இளைஞர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு
மாணவ, மாணவியருக்கு சிறுதுளி பெரு வெள்ளம் என்ற தலைப்பில் சிறு சேமிப்பு பற்றிய பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.  தலைவர் வழக்கறிஞர் வி.சுபாசினி வில்சன் வரவேற்புரை நிகழ்த்தினார்.  எஸ்ட்டென்ஷன் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்  ஜி.ரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறு சேமிப்பு முகவர்,செயலாளர்  A. ஆயிஷா இப்ராஹிம்,  சேமிப்பின் முக்கியத்துவம் மற்றும் பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பது குறித்தும், தபால் நிலைய  சேமிப்பு திட்டங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறினார். பட்டயத் தலைவர் டி. ஜெர்லின் தினகரன் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் சிறுசேமிப்பு குறித்த கேள்விகளுக்கு சரியான பதிலளித்த சிறந்த 6 மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை துணைத் தலைவர் பயிற்சி R. அஜிதா பிரபு மற்றும் இயக்குனர் Jc A. ஃபைஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் நிர்வாகத் துணைத் தலைவர்  மதுமிதா, இயக்குனர் முபாராஷா ஆகியோர் கலந்து கொண்டனர். ஜேசி . ஏ. ஃபைஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad