தருவையில் மின்வாரிய மகளிர்க்கான வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 7 January 2023

தருவையில் மின்வாரிய மகளிர்க்கான வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மகளிர்க்கான வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு (தருவை) அரங்கத்தில் 06.01. 2023  அன்று தொடங்கி  நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றது. போட்டியில் டேபிள் டென்னிஸ், கேரம், இறகு பந்து, செஸ், எரி பந்து, பைபந்து உள்ளிட்ட ஆறு வகையான விளையாட்டு போட்டிகளில் மின்வாரிய மகளிர்கள் கலந்து கொண்டு விளையாடினர். 
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குள் பணி புரியும் மகளிர்க்கான கேரம் விளையாட்டுப் போட்டியை தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமைதாங்கி துவக்கி வைத்தார். செயற்பொறியாளர் ரெமோனா முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் மின்வாரிய மாவட்ட விளையாட்டு குழு பொறுப்பாளர் சந்தனராஜ், விளையாட்டு குழு உறுப்பினர்கள் எட்மண்ட், பேச்சிமுத்து, நோபல், தமிழரசன், பரதன் மற்றும் கலைக்கண்ணன் ஆகியோர் முன்னின்று இப் போட்டிகளை சிறப்பாக நடத்தினர்.
இப் போட்டிகளில் வெற்றி பெறும் வீராங்கனைகள் வரும் ஜனவரி 18,19 ஆகிய தினங்களில்
திருநெல்வேலியில் நடைபெறும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள
உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad