கே.ஜி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் 6வது தேசிய சித்தர் தின விழா விழிப்புணர்வு பேரணியுடன் கொண்டாடம் . - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 6 January 2023

கே.ஜி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் 6வது தேசிய சித்தர் தின விழா விழிப்புணர்வு பேரணியுடன் கொண்டாடம் .

பதினெட்டு சித்தர்களில் ஒருவரான அகத்திய பெருமான் பிறந்த மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தில் தேசிய சித்தர் தின விழா கொண்டாடத்தை முன்னிட்டு  தேசிய சித்தர் தின விழா ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர்(பொறுப்பு) வெங்கிடாசலம் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் தமிழாசிரியை முத்து லெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியில்
மாணவர்கள் அனைவரும் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தொடர்ந்து  சிறப்பு விருந்தினராக எழுத்தாளர், முத்தாலங்குறிச்சி காமராசு கலந்துகொண்டு அகத்தியர் பற்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட சித்த மருத்துவர்கள் ரவீந்திரன் தமிழர் வாழ்வியலில் சித்த மருத்துவம் என்ற தலைப்பிலும் , செல்வகுமார் யோகாவும் ஆரோக்கியமும் என்ற தலைப்பிலும், ரதி செல்வம், வளரினம் மாணவர்களின் மனநல பிரச்சினைகளும் தீர்வும் என்ற தலைப்பிலும், முருகப் பொற்செல்வி தமிழ் நூல்களில் சித்த மருத்துவம் என்ற தலைப்பிலும், ஜன்னத் ஷெரிஃப் உணவே மருந்து மருந்தே உணவு என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.பள்ளி வளாகத்தில் மூலிகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. சித்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாணவர்களுக்கு ஞாபக சக்தி தரும் வல்லாரை மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் முத்தையா, வெங்கடாசலம், செல்வன், ஆறுமுகம், நக்கத் மாகீன் அபுபக்கர், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன் தலைமையில் என்.சி.சி ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான மாணிக்கம் செய்திருந்ததுடன் கலந்து கொண்டவர்களுக்கு நன்றியும் கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad