மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இறுதி வாக்காளர் பட்டியலை கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 6 January 2023

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இறுதி வாக்காளர் பட்டியலை கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்


தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023ல் இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  வெளியிட்டார். இதன்படி மாவட்டத்தில் 09.11.2022 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக 27011 நபர்கள் வாக்காளராக சேர்க்கப்பட்டும், இறந்தவர்கள் மற்றும் முகவரி மாறி சென்றவர்கள் ஆகியோர் 12018 பேர் நீக்கம் செய்யப்பட்டும், இந்த இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்படுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 7,18,724 ஆண் வாக்காளர்கள் 7,52,023 பெண் வாக்காளர்கள் மற்றும் 215 மூன்றாம் பாலினத்தோரை சேர்த்து ஆக மொத்தம் 14,70,962 வாக்காளர்கள் உள்ளனர்.
 தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 1619 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவ்வாக்குச்சாவடிகள் 883 மையங்களில் அமைந்துள்ளது.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023 ஆம் ஆண்டுக்கான பணி கடந்த 09.11.2022 முதல் 08.12.2022 வரை 90 மையங்களில் நடைபெற்றது. 09.11.2022 அன்று வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் 27,8961 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். 01.01.2023 அன்று 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்தல், இறப்பினை நீக்கம் செய்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 
மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 284. மேற்கண்ட வாக்காளர் பட்டியலில் மொத்தம் 281643 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 137647, பெண் வாக்காளர்கள் 143923 இதரபிரிவினர் 73 ஆகும். தற்போது வெயிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் 0.95 சதவிகிதம் கூடுதல் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதில் மவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், துணை மேயர் ஜெனிட்டா, திமுக சார்பில் ஆனந்த சேகரன், அவைத்தலைவர் செல்வராஜ், ரவி, அதிமுக சந்தானம், கம்யூனிஸ்ட் நகர செயலாளர் ராஜா மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளர் பதிவு அலுவலர்/ மாநகராட்சி ஆணையர் சாரு ஶ்ரீ, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
உடன் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் , வட்டாட்சியர் செல்வக் குமார், அரசியல் கட்சி நிர்வாகிகள் திமுக ரவி, அதிமுக சாகாயராஜ், பாஜக மான்சிங், இந்திய கம்யூனிஸ்ட் ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad