கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய என். எஸ். எஸ் முகாம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 5 January 2023

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய என். எஸ். எஸ் முகாம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் என். எஸ். எஸ் எனப்படும் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பிலிருந்து நாட்டு நலப்பணி திட்ட முகாம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சிக்குட்பட்ட ஆழ்வார் கற்களும் கிராமத்தில் கடந்த 3ம்தேதி முதல் தொடங்கி வரும் 9ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியர் கலந்து கொண்டு களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.நிகழ்ச்சியின் முதல் நாளில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பி.டி.ரமேஷ் வரவேற்புரை வழங்க கல்லூரியின் முதன்மையர் முனைவர் எம்.தேரடி மணி தலைமை உரை வழங்கினார்.
தாவர இனப்பெருக்க மற்றும் அறிவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.
ஆறுமுகம் பிள்ளை, பயிர் நோயியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.ஈ ஜி எபினேசர்,வேளாண் பூச்சியில் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.டி அப்துல் ரசாக், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் எஸ்.ஜோதிமணி, தோட்டக்கலைத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ரிச்சர்ட் கெனடி,வேளாண் விரிவாக்கத்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.டீ தாமோதரன், உளவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஏ சோலைமலை, பயிர் வினையியல் துறை பேராசை மற்றும் தலைவர் முனைவர் எஸ் சீனிவாசன், வேளாண் பொறியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் எஸ். ஸ்ரீராம்,
வேளாண் பொருளி யில் துறை இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் எஸ்.செந்தில்நாதன், உடற்கல்வி உதவி இயக்குனர் முனைவர் எம்.செந்தில்குமார், ஆழ்வார்கற்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வி.மலைமேகலை, கூட்டுறவு வங்கி செயலாளர் ஜி.தம்பு மற்றும் ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர்.முகாமின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியான இன்று(05/01/23) திருநெல்வேலி டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனையை இருந்து வந்திருந்த மருத்துவர் குழு மூலமாக கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் கிராமத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.மேலும் இன்று நிகழ்ச்சியில் பயிர் நோயியல் துறையைச் சார்ந்த முனைவர் ஈ.ஜி. எபனேசர் காளான் உற்பத்தி தொழில்நுட்பம் பற்றியும், தோட்டக்கலை துறையின் இணை பேராசிரியர் முனைவர் எம்.ஐ. மணிவண்ணன் வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல் பற்றியும் விளக்கினர்.

No comments:

Post a Comment

Post Top Ad