திருச்செந்தூர் குமாரபுரம் ஸ்டார் மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மத நல்லிணக்க விழா நடைபெற்றது! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 22 January 2023

திருச்செந்தூர் குமாரபுரம் ஸ்டார் மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மத நல்லிணக்க விழா நடைபெற்றது!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள குமாரபுரத்தில் ஸ்டார்ஸ் மாடல் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் மத நல்லிணக்க நாள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்டார் மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ஜெயதாஸ் முன்னிலை வகித்தார், முதல்வர். கண்ணு தலைமை தாங்கினார்.

பள்ளி ஆசிரியர்.வனிதா வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மத நல்லிணக்கத்தை குறித்து திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி விரிவுரையாளர் ஜெயலட்சுமி  மகாபாரத கதைகளை விளக்கி மாணவர்களிடம் நல்லொழுக்கத்தை பற்றி பேசினார், "நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாற்றை பற்றி காயல்பட்டினம் துளிர் டிரஸ்ட் இயக்குனர் வக்கீல் அகமது பேசினார், மணப்பாடு ஆலய பாதிரியார் ஆரோக்கிய அமல்ராஜ் கதைகள் மூலம் செய்திகளை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறினார்.  பள்ளி மாணவ, மாணவிகள் மிக ஆர்வமுடன் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

 

விழா முடிவில் பள்ளி தாளாளர் மத நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்த நாள் அவசியம் பற்றி விவரித்து பேசி, அனைவருக்கும் நன்றி கூறினார்.  நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad