திருச்செந்தூர் கோவிலில் மத்திய இணை அமைச்சர் சத்ரு சம்ஹார யாகம் செய்தார்!. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 22 January 2023

திருச்செந்தூர் கோவிலில் மத்திய இணை அமைச்சர் சத்ரு சம்ஹார யாகம் செய்தார்!.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சத்ரு சம்ஹார யாகம் செய்தார் அதனை தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தார். 

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார். பின்னர் சுவாமி தரிசனம் செய்தார். அதிகாலை 5 மணிக்கு அவர் கோவிலுக்கு சென்று பிரகாரத்தில் உள்ள சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தார். பின்பு எதிரிகளை வீழ்த்த சத்ரு சம்ஹார பூஜை செய்து  கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள ஆனந்த விலாசம் மண்டபத்தில் சத்ரு சம்ஹார  சிறப்பு யாகத்தை செய்தார்.


பின்னர் மீண்டும் கோவிலுக்குள் சென்று சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிக்கு   12 வகையான விசேஷ அபிஷேகம் மற்றும் 6 வகையான மலர்களால் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.  பின்னர் அவர் சுவாமி மூலவர், சண்முகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவருடன் பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், திருச்செந்தூர் நகர தலைவர் நவ மணிகண்டன், ஆன்மீக  ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் வினோத் சுப்பையன், சிறுபான்மை பிரிவு அணி தலைவர் ஸ்டீபன் லோபோ, உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர பா.ஜ.க பொறுப்பாளர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad