ஏரல் பேரூராட்சி முழுவதும் போர்க்கால அடிப்படையில் சுகாதாரத்துறை,பேரூராட்சி துறை இணைந்து ஒட்டுமொத்த தீவிர காய்ச்சல் தடுப்பு பணிகள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 4 January 2023

ஏரல் பேரூராட்சி முழுவதும் போர்க்கால அடிப்படையில் சுகாதாரத்துறை,பேரூராட்சி துறை இணைந்து ஒட்டுமொத்த தீவிர காய்ச்சல் தடுப்பு பணிகள்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தேர்வுநிலை பேரூராட்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.செந்தில்ராஜ் உத்தரவின்படி திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆலோசனையின் பேரிலும் ஏரல் தேர்வுநிலை பேரூராட்சி 15 வது வார்டுகளிலும் உள்ள அனைத்து தெருக்களிலும் முழுமைக்கும் சுகாதாரத் துறை மற்றும் பேரூராட்சி துறை உள்ளடக்கிய ஒட்டுமொத்த தீவிர காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்றது. தூத்துகுடி மாவட்ட தூத்துக்குடி இணை சுகாதாரப் பணிகள் மருத்துவர் பொற்செல்வன் தலைமையில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் கருப்பசாமி, திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவின் பேரில் ஏரல் பேரூராட்சி செயல் அலுவலர் நா.தனசிங், பேரூராட்சித் தலைவர் சர்மிளா தேவி மணிவண்ணன்,ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், மருத்துவ நான்கு குழுக்கள் மற்றும் எச்.ஐ. 13பேர் அடங்கிய 28 குழுக்கள் டெங்கு மஸ்தூர் 70 பணியாளர்கள் மேற்கொண்ட பணிகளில் துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் மதுரை சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு ஏரல் பேரூராட்சிகளில் இருக்கக்கூடிய 15 வார்டுகளில் இருக்கும் பகுதிகளிலும் முதிர்ந்த கொசுக்களை ஒழிக்கும் பொருட்டு புகை மூலம் கொசுமருந்து செலுத்தப்பட்டது.மேலும் சித்த மருத்துவ அலுவலர் ரோசாட்ரி தலைமையில் நிலவேம்பு கசாயம் நகரின் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி துறை இணைந்து ஏரல் பேரூராட்சி முழுவதும் ஒட்டுமொத்த தீவிர காய்ச்சல் தடுப்பு பணிகளை செய்தது.
பொதுமக்கள் அனைவருக்கும் தீவிர காய்ச்சல் தடுப்பு பணிகளை ஏரல் பேரூராட்சி செயல் அலுவலர் நா.தனசிங், வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad