செய்துங்கநல்லூரில் இளைஞர் திறன் திருவிழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 3 January 2023

செய்துங்கநல்லூரில் இளைஞர் திறன் திருவிழா.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இளைஞர் திறன் திருவிழா மாவட்ட ஆட்சியர் மரு. கி. செந்தில் ராஜ் அறிவுறுத்தலின் படி மகளிர் திட்ட திட்ட இயக்குநர்  மரு.வீரபத்திரன் தலைமையில்  செய்துங்கநல்லூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இந்த இளைஞர் திறன் திருவிழாவில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த 18 இல் இருந்து 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் என இரு பாலரும் கலந்து கொண்டனர். அதிக வேலை வாய்ப்புள்ள தொழில்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், திறன் மேம்பாடு குறித்த தகவல்களை பெறவும், நேரடி வேலை வாய்ப்புக்கான தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் இந்த இளைஞர் திறன் திருவிழா பெரிதும் பயன்பட்டது.குறிப்பாக தையல், ஆயத்த ஆடை வடிவமைப்பு,அழகு கலை பயிற்சி உதவி,  நான்கு சக்கர வாகனம் பழுது பார்த்தல்,கணினி பயிற்சி, சில்லறை விற்பனை, துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்குதல் இது போன்று பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை வழங்கும் முன்னணி நிறுவனங்கள் வளரும் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை பற்றியும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு இருக்கும் முன்னுரிமை பற்றியும் தகவல்களைத் தந்தனர்.மொத்தம் இதில் 365 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 123 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கபட்டது. நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி,
பாக்கியலீலா,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேந்திர பிரபு,சந்திர சேகர் உதவிதிட்ட அலுவலர் பிரபாகர்,ஊராட்சி மன்ற தலைவர் பார்வதிநாதன்,
வட்டார இயக்க மேலாளர் வேல்கனி
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தி,மகேஷ்வரி,கிரேஸ்,பானுமதி,
வள்ளியம்மாள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad