பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 2 January 2023

பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு


தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய சாலைகள், ஹைமாஸ் விளக்குகள், செயற்கை வண்ணநீர் ஊற்றுகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், வாகன காப்பகம், உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாநகர பகுதியில் இருந்த பழைய பேருந்து நிலையம் முழுமையாக அகற்றப்பட்டு புதிய பொலிவுடன் அனைத்து வசதிகளுடன் நவீன தொழில் நுட்பத்துடன் அடுக்குமாடி பேருந்து நிலையமாக மாற்றும் கட்டிட பணி நடந்து வருகிறது. 
  திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இதற்கு முன்
ஏற்கனவே ஒருமுறை ஆய்வு மேற்கொண்டுள்ளார். இரண்டாவது முறையாக மீண்டும் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏ சண்முகையா, ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, நகராட்சி-மாநகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டனர் .
  பின்னர் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டியில்: "தூத்துக்குடி புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் சிதம்பரநகர் வணிக வளாகம் ஆகிய இரண்டும் பிப்ரவரி மாதத்திற்குள் பணிகள் நிறைவுபெறும் என ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் மார்ச் மாதத்தில் இரண்டும் திறக்கப்படும். இந்த பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் அனைத்தும் முறையாக ஏலம் விடப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்.வாகன காப்பகம் டெண்டர் மூலம் வழங்கப்படும். அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டாலும், மாநகராட்சி ஆணையரின் நேரடி பார்வையில் செயல்படும்.அதே போல் பாதாள சாக்கடை திட்டமும், மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த ஆட்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வந்த புகாரையடுத்து விசாரணைக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு 10 மாநகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்."என்று கூறினார். 
  நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன்,  பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், கஸ்தூரிதங்கம், மாநகர அணி அமைப்பாளர்கள் டாக்டர் அருண்குமார், பிரபு, சக்திவேல், துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், டைகர்வினோத், அருண்சுந்தர், ஆர்தர்மச்சாது, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார் மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வகுமார், சேர்மபாண்டியன், கவுன்சிலர்கள் முத்துவேல், சரவணக்குமார், பொன்னப்பன், ஜான், வைதேகி, நாகேஷ்வரி, ஜான்சிராணி, ராஜதுரை, ஜெயசீலி, தெய்வேந்திரன், சோமசுந்தரி, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலு, சுப்பையா, நவநீதன், வன்னியராஜ், சதீஷ்குமார், செல்வராஜ், ரவிந்திரன், சுரேஷ், கீதாசெல்வமாரியப்பன், முத்துராஜா, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி மற்றும் கருணா, அல்பட், பிரபாகர், ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தெற்கு மாவட்ட திமுக சார்பில் கூட்டுறவு சங்க தலைவர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், மாநகராட்சி பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் தனசிங், சேகர், சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment

Post Top Ad