தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி.ஆட்சியர் தொடங்கி வைத்தார் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 25 January 2023

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி.ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சி இராஜாஜி பூங்காவில் இருந்து , கொடியசைத்து துவக்கி வைத்தார். வாக்காளர் விழிப்புணர்வு பேரணியானது ராஜாஜி பூங்காவில் தொடங்கி குரூஸ் பர்னாந்து சிலை அருகில் நிறைவடைந்தது. பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்வில்
ஆட்சியர் கூறுகையில்: 
இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்ட நாளான ஜனவரி 25ம் நாள் ஆண்டு தோறும் தேசிய வாக்காளர் தினமாக  அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் மூலம் வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நடைபெறும். ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.அதனை முன்னிறுத்தி தேசிய வாக்காளர் தினத்தில் இளம் வாக்காளர்களை அதிகமாக பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும் இளம் வாக்காளர்களும் கௌரவிக்கப்படுவர்.
வாக்காளர் தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பத்திரிக்கை, ஊடகங்கள் வாக்காளர் தினம் குறித்த விழிப்புணர்வை மாவட்டம் முழுவதும் கொண்டு சேர்த்து இளம் வாக்காளர்களை அதிகளவு சேர்க்க வேண்டும். அடுத்த வருடம் 2024ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, சார் ஆட்சியர் கௌரவ் குமார் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், தேர்தல வட்டாட்சியர் ரகு,  வ.உசி கல்லூரி பேராசிரியர் செல்வம், மற்றும் வ.உசி கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad