தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 25 January 2023

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி


 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர்
டி.எம்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்‌ தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.  கல்லூரியின் இயக்குனர் முனைவர் P.கோபால்,  மக்கள் தொடர்பு அதிகாரி  கெ.கெங்குமணி  முன்னிலையில் மனித சங்கிலியை  துவக்கி வைத்தார்.  குளத்தூர் காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வகுமார், சி. ஐ. டி பிரபாகரன் ஆகியோர் கலந்து பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.  மாணவ, மாணவிகள் ஏராளமானோர் 
கலந்துகொண்ட இந்த மனித சங்கிலியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் அடங்கிய   வாசகங்கள்  பதாகைகளை கையில் ஏந்தியவாறு  மாணவர்கள் கோஷமிட்டனர்.  கல்லூரியின் அனைத்து மாணவர்களும்,  பேராசிரியர்களும் தேசிய வாக்காளர் தின  விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.மக்கள் தொடர்பு அதிகாரி கெ.கெங்குமணிக்கு குடிமக்கள் நுகர்வோர் குழு ஒருங்கிணைப்பாளர் செல்வி R.சங்கீதப்பிரியா பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.இந்த விழிப்புணர்வு மனித சங்கிலி  குளத்தூர் பஸ் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. பேரணி சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கல்லூரியின் முதல்வர் முனைவர் M. அன்பழகன் தலைமையில் குடிமக்கள் நுகர்வோர் குழு  ஒருங்கிணைப்பாளர்  செல்வி R.சங்கீதப்பிரியா அவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad