74வது குடியரசு தின விழா.ரூ.10.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 27 January 2023

74வது குடியரசு தின விழா.ரூ.10.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 74வது குடியரசு தின விழா மாவட்ட விளையாட்டு (தருவை) அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் மரு. கி செந்தில்ராஜ் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்து
மரியாதை செய்தார்.மாவட்ட எஸ்.பி.
முனைவர் பாலாஜி சரவணன் முன்னிலையில் காவல் துறை, தீயணைப்பு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் விதமாக வெண் புறாக்களை வானில் பறக்கவிட்டர் .
இந்நிகழ்ச்சியில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 54 நபர்களுக்கு சான்றிதழ்களும் , 81பேருக்கு முதல்வரின் பதக்கங்களையும் ஆட்சியர் வழங்கினார். மேலும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை நலத்துறை, கூட்டுறவுத்துறை, உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், சிறந்த மாணவர் விருது என மொத்தம் 406பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கியதுடன் விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 45 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 77ஆயிரத்து 818 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய காசநோய் பிரிவில், சிறப்பாக பணியாற்றியமைக்காக, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்கள் அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் மூலம் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர். விழாவில் கூடுதல் ஆட்சியர் கெளரவ் குமார், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கனகராஜ், முன்னோடி வங்கி அலுவலர் துரைராஜ், நபார்டு வங்கி துணை மேலாளர் துரை, வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதம், மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தாசில்தார் செல்வகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், ஏ.டி.எஸ்பி கார்த்திகேயன், டி.எஸ்.பிகள் சத்யராஜ், வெங்கடேஷன், ஆவுடையப்பன், அருள், லோகேஸ்வரன், தனிப்பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து, உட்பட வந்திருந்த பலரும் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுக்களித்தனர் . 
.

No comments:

Post a Comment

Post Top Ad