சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளரும், நீதிபதியுமான எம்.பிரீதா தலைமையில் ஸ்பார்க்கின் 6வது ஆண்டு விழா கொண்டாட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 29 January 2023

சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளரும், நீதிபதியுமான எம்.பிரீதா தலைமையில் ஸ்பார்க்கின் 6வது ஆண்டு விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி பாம்ஸ் அரங்கில் ஸ்பார்க்கின் 6வது ஆண்டு விழா
கடந்த ஜனவரி 26ம் தேதி தூத்துக்குடி சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளரும், நீதிபதியமான எம்.பிரீதா தலைமையில் குத்து விளக்கு ஏற்றி பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் ஸ்பார்க் நிறுவனர் வழக்கறிஞர் சொர்ணலதா வரவேற்றுப் பேசினார்.சிறப்பு விருந்தினரை ஜுவானா அறிமுகப்படுத்தினார்.
நிறுவன உறுதிமொழியை செல்வி திவ்யா வாசிக்க,ஆண்டறிக்கையை ராஜீவி  வாசித்தார்.  துணை நிறுவனர் செந்தில் கண்ணன் ஸ்பார்க்ன் எதிர்காலத் திட்டங்களைப் பகிர்ந்து கொண்டார். நீதிபதி எம்.பிரீதா சிறப்புரையாற்றி கொரோனா காலத்தில் சேவையாற்றிய ஸ்பார்க் தன்னார்வலர்களுக்கு கொரோனா முன்களப்பணியாளர் சான்றிதழும், விருதுகளும் வழங்கி கௌரவித்தார். ஸ்பார்க் நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து பள்ளிகளும் விழாவில் அங்கீகரிக்கப்பட்டன. நிறைவாக
பாலமுருகன் நன்றி கூறினார்.
ஸ்பார்க் பற்றிய குறிப்பு :
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சமூக முன்னேற்றத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட
ஸ்பார்க் தன்னார்வ சமூக அமைப்பாகும். மேலும் தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்சனைகளில் விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாக கொண்டது .
குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு, சட்ட விழிப்புணர்வு, சமூக அக்கறைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் என்ற நான்கு பரந்த பகுதிகளில் ஸ்பார்க் செயல்படுகிறது. பசுமை பூமி, ஆரோக்கியமானபொழுதுபோக்குகள்
உடல்நலம், சுகாதாரம், குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு, இணைய குற்ற பாதுகாப்பு, சாலைப் பாதுகாப்பு, தொழில் வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad