தேசிய பெண் குழந்தைகள் தினம் சார்பில் ஜே.சி.ஐ மற்றும் கல்லூரி மாணவிகளின் பேரணி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 24 January 2023

தேசிய பெண் குழந்தைகள் தினம் சார்பில் ஜே.சி.ஐ மற்றும் கல்லூரி மாணவிகளின் பேரணி

 ஜே.சி.ஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ்
மற்றும் ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி இணைந்து தேசிய பெண் குழந்தைகள் தினம் சார்பில் பேரணி தூத்துக்குடியில் நடைபெற்றது. ஜேசிஐ பேர்ல்சிட்டி குயின்பீஸ் இன் தலைவர் ஜே. எப்.எம் வழக்கறிஞர் வி. சுபாசினி தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் அருட். சகோதரி.முனைவர்.ரூபா,பேராசிரியர்கள் 200க்கும் மேற்பட்ட மாணவிகள்  அனைவரும் "பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளை காப்பது ஒரு தலைமுறையை காப்பது ஆகும்" போன்ற கோசங்களை எழுப்பியும், பாதாகைகளை தாங்கிய படி ஊர்வலமாக கல்லூரியிலிருந்து தொடங்கி புதுகிராமம் சாலை, ஜின் பேக்டரி ரோடு வழியாக வந்து குருஸ் பார்ணாந்திஸ் சிலை அருகில் நிறைவு பெற்றது. வழக்கறிஞர்
வி. சுபாசினி பேசும்போது "பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியும் அவர்களை எப்படி துஷ்பிரயோகத்திலிருந்து தடுக்கலாம் என்பது பற்றி விரிவுரை வழங்கியதுடன்,அவர்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தினர்.குறிப்பாக தூத்துக்குடி பொது மக்களிடமும், பெண் குழந்தைகளிடம் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வுக்கு உறுதுணையாக உள்ள தமிழக அரசுக்கும் நன்றி கூறினார்.
 நிகழ்ச்சியை செயலாளர்
ஜேசி.ஹச். ஜி.எப்.அ. ஆயிஷா இப்ராஹிம் மற்றும் துணைத் தலைவர் நிகழ்ச்சி ஜேசி டி. சுதா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பியர்ல் சிட்டி குயின் பீஸ் பட்டயத் தலைவர் ஜேசி ஹச். ஜி. எப் டி.ஜெர்லின் தினகரன், துணைத் தலைவர் பயிற்சி ஜே. எப். எம்.ஆர் அஜிதா பிரபு, துணைத் தலைவர் மேலாண்மை ஹச். ஜி. எப்.
ஏ.மதுமிதா, துணைத் தலைவர் கிரேஸ் மற்றும் இயக்குநர்கள்  அ. பயஸ் ஷபிர்,  அ. டிஸ்னி அன்டனி, முபாராஷா, ஜேசிஐ பேர்ல்சிட்டி தலைவர் ஏ ராஜேஷ், மண்டல அதிகாரி செனட்டர் ஆர்.ஸ்ரீதரன், மண்டல எஸ்.எம்.ஏ ஒருங்கிணைப்பாளர்  செனட்டர் முத்துராமன்,ஜேசிஐ பேர்ல்சிட்டி  பொன்ராஜா மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேரணியில் பங்கேற்றனர்.ஹோலி கிராஸ் ஹோம் சயன்ஸ் கல்லூரி இணைப் பேராசிரியர் முனைவர் மதுரவள்ளி, பேராசிரியை கிருஷ்ணவேணி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad