திருச்செந்தூர் சைவ வேளாளர் ஜக்கிய சங்கத்தின் சார்பில் அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத சிவகொழுந்தீஸ்வர் கோவிலில் திருவிளக்கு பூஜை! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 January 2023

திருச்செந்தூர் சைவ வேளாளர் ஜக்கிய சங்கத்தின் சார்பில் அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத சிவகொழுந்தீஸ்வர் கோவிலில் திருவிளக்கு பூஜை!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத சிவகொழுந்தீஸ்வர் கோவிலில் திருவிளக்கு பூஜை திரளான பெண்கள் பங்கேற்றனர்.


திருச்செந்தூர் சைவ வேளாளர் ஜக்கிய சங்கத்தின் 158ஆவது ஆண்டு தை அமாவாசையை முன்னிட்டு பத்திரதீபவிழா அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத சிவகொழுந்தீஸ்வர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 250 பெண்கள் திரு விளக்குகளை வைத்து விளக்கு பூஜை செய்தனர். திருவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து நைவேத்தியம் செய்து கற்பூரஹாரத்தி காண்பித்து தீர்க சுமங்கலியாக இருக்க ப்ரார்த்தனை செய்தனர்.


வருடந்தோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் விளக்கு பூஜை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல், உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் சைவ வேளாளர் ஐக்கிய சங்க  தலைவர் ஆனந்தராமச்சந்திரன், செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் பொன்முருகேசன் வ.உ.சி.நற்பனிமன்ற நிறுவனர் இசக்கிமுத்து, சங்க நிர்வாகஸ்தர்க ஜெகநாதபெருமாள் மற்றும் நிர்வாகஸ்தர்கள், சைவ வேளாளர் மகளிர் அணியினர் பலர்  கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சைவ வேளாளர் ஜக்கிய சங்கத்தினர் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad