"மாவட்டதிற்கு பெருமை சேருங்கள்" கலைத்திருவிழாவில் மேயர் ஊக்கம் தரும் பேச்சு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 7 December 2022

"மாவட்டதிற்கு பெருமை சேருங்கள்" கலைத்திருவிழாவில் மேயர் ஊக்கம் தரும் பேச்சு

 தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில்  “கலைத்திருவிழா” முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியில் டிசம்பர் 07 முதல் 9ம் தேதி வரை 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவியர்களுக்கான
நடைபெறுகிறது. மாவட்ட அளவிலான இந்த கலைத்திருவிழா போட்டிகளின்  தொடக்க நாள் விழாவான டிசம்பர் 7ம் தேதி தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி விழாவில் வரவேற்புரையாற்றினார். கிரேஸ் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.ரிச்சர்ட், மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் (கோவில்பட்டி) தொடக்கநிலை மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு, தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை கல்வி) தமிழ்செல்வி, உதயகுமார் (தொடக்கநிலை கல்வி), புள்ளியியல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது 
"நமது அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு துறைகளில் தங்களது திறமையை வளர்த்து கொள்வதற்க்காக தமிழக அரசால் இக் கலைத்திருவிழா நடத்தப்படுகின்றது. இதில் நாடகம், நடனம், கவின் கலை (ஓவியம்), இசைப்பிரிவில் ,தோல் கருவி, துளை கருவி, கம்பி கருவி, காற்று கருவி, குழு இசை, நாட்டுப்புற இசை என பல போட்டிகளும், மொழித்திறனை வளர்த்து கொள்வதற்க்காக பேச்சு போட்டி, பாடல், கவிதை, கட்டுரை, பிறமொழித் திறன் என பல போட்டிகளும் நடத்தப்படுகின்றன.இவைகள் அனைத்தும் மாணவர்களின் உயர்கல்வி போட்டி தேர்வுகள், வேலை வாய்பு என எதையும் எதிர்கொள்ளவும், தங்களை பக்குவப்படுத்தவும் உதவும்.
மாணவ மாணவியர் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தங்கள் திறன்களை வளர்த்து போட்டிகளில் வெல்ல வேண்டும், மேலும் தங்களது பள்ளிக்கும் நமது தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாநில அளவில் சாதனை படைத்து நல்ல பெயர் வாங்கவேண்டும்" என பேசினார்.
நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் சுமார் 1350 பேர் கலந்து கொண்டனர். கல்வி இடைநிற்றல் பிரிவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜலட்சுமி, கிருஷ்ணவேணி, சத்யசீலன், சுடலைமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். கலைத்திருவிழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் செய்திருந்தார். நிறைவில் உதவி திட்ட அலுவலர் பெர்சியாள் ஞானமணி நன்றி தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad