"அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இன்றைய இளைஞர்களின் பங்கு " மனித உரிமைகள் தின சிறப்பு கருத்தரங்கம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 8 December 2022

"அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இன்றைய இளைஞர்களின் பங்கு " மனித உரிமைகள் தின சிறப்பு கருத்தரங்கம்


 உலகம் தோறும் டிசம்பர் 10ஆம் தேதி  வருடம் தோறும் மனித உரிமை நாளாக கொண்டாடப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் இருக்கக்கூடிய புனித தோமையார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் "அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இன்றைய இளைஞர்களின் பங்கு" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது இதில் மதச் சுதந்திரம், கருத்து வேறுபாடு உரிமைகள்,கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை என பல்வேறு தலைப்புகளில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தினர். கல்லூரியின் தாளாளர் அருட்தந்தை சகாயம் , மறை மாவட்டம் அருட் தந்தை ஜேம்ஸ் விக்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
வழக்கறிஞரும் நோட்ரிக் பப்ளிக்குமான சொர்ணலதா சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு மனித உரிமைகள் பற்றியும் குறிப்பாக பெண்களின் உரிமைகளுக்கான தெளிவு பெறுதல் பற்றியும்,அவர்களுக்கான பாதுகாப்பு உரிமைகள்,அவர்களுக்கு நாட்டின் அனைத்து துறைகளிலும் இருக்கக்கூடிய அடிப்படை ஆதார உரிமைகள் மற்றும் கடமைகள் அதன் விளைவாக அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் ஸ்பிக் நகர் ரோட்டரி கிளப் தலைவர் அருண் ஜெயக்குமார்,ஒய்.எம். சி. ஏ தலைவர் வழக்கறிஞர் ஸ்டான்லி வேதமாணிக்கம்
கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜேம்ஸ்,பல்சமயம் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ஸ்டார்வின் ஆகியோர் விளக்க உரையாற்றினர் நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு பாடல் பாடியும்,இயற்கையை நேசிப்பது பற்றிய விழிப்புணர்வு பாடல் பாடியும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.மேலும் புற்று நோய் விழிப்புணர்வு,மனித உரிமைகளை காத்தல், ரத்ததானம் ஆகிய தலைப்புகளில் வரைபடங்கள் வரைந்து அவற்றின் மூலம் விளக்கங்களை தந்தனர்.
விழாவில் முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

No comments:

Post a Comment

Post Top Ad