அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் "பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்புத் தடைச்சட்டம் 2013 விழிப்புணர்வு நிகழ்ச்சி " - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 9 December 2022

அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் "பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்புத் தடைச்சட்டம் 2013 விழிப்புணர்வு நிகழ்ச்சி "

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பணி இடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்புத் தடைச்சட்டம் 2013 விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் நிலா சீபுட்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில் " பணியிடத்து பெண்களுக்கு பாதுகாப்பு என்பது உங்களது அடிப்படை உரிமை. பாலியல் தொந்தரவு, பாலியல் வண்புனர்வு, பாலியல் வன்முறை, சீன்டல், தவறான பேச்சு மற்றும் தவறான குறுந்தகவல் என எந்தவகையிலாவது பணி பெண்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக உள்ளூர் புகார் குழுவிடம் புகார் தெரிவிக்க வேண்டும், புகார் செய்யும் பெண்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும், எனவே பாதிக்கப்படும் பணியிடத்து பெண்கள் தைரியமாக முன்வந்து தடுப்புத் தடைச்சட்டம் 2013ஐ பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தமிழக அரசு என்றும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்" என தெரிவித்தார்.
 மாவட்ட சமூக நல அலுவலர் ரதி தேவி வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட உள்ளூர் புகார் குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஸ்வர்ணலதா ஆகியோர் பணியிடத்தில் பாலியல் வன்முறை, பாதுகாப்பு, விழிப்புணர்வு, அடிப்படை உரிமைகள் குறித்தும், பாலியல் துன்புறுத்தல் தடுப்புத் தடைச்சட்ட பாதுகாப்பு குறித்தும் கருத்துரை வழங்கினர்.தொடர்ந்து பெண்ணியம் போற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கான கையெழுத்து பிரச்சாரத்தையும், பெண்களுக்கான பாலியல் புகார் தொடர்பான புகார் பெட்டியினையும் அமைச்சர் கீதா ஜீவன், மற்றும் ஆட்சியர் செந்தில் ராஜ் அறிமுகப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிறைவாக ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஷெலின் ஜார்ஜ் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் நிலா சீ புட்ஸ் கம்பெனி உள்ளூர் புகார் குழு தலைவர் அபிராமி, மனித வள மேலாளர் ஜெயசீலன், மக்கள் தொடர்பு அதிகாரி ராஜாமணி மற்றும் அலுவலர்கள், ஆண், பெண் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad